கோவனூர் பாறைஓவியங்களைப் பார்க்க திரு காந்திராஜன் அவர்களிடம் அலைபேசியில் வழியைக் கேட்டுக்கொண்டே, ஏதோ நம்பிக்கையில்தனியாகப் போயிருந்தேன். கோவை பெரியநாயக்கன் பாளையத்திலிருந்து கோவனூர் சென்று அங்கிருந்து பாலமலையில் ஏற வேண்டும். பயந்தது போலவே வழிமாறி காட்டுக்குள் சுற்றித்திரிந்து ஒருவழியாக பூங்கோலம்மன் கோயிலைக் கண்டுபிடித்தோம். அது பெரிய கோயிலாக இல்லாமல் சிறிய வழிபாட்டுத்தளமாக இருந்தும் அங்கே செல்லப் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டும் இருந்தன. நம்மை அவ்வூர்காரர்கள் அவ்விடத்திற்கு அழைத்துச்சென்றார்கள்.
வெள்ளைநிறத்தில் வரையப்பட்ட மனித, விலங்கின உருவங்கள் காணப்படுகின்றன. எருதுகள், ஆடுகள், மான்கள், யானைகள், மான்கூட்டத்தை கையில் அம்பை வைத்துக்கொண்டு
வேட்டையாடும் மனிதர்கள் என சுமார் 50 லிருந்து 60 உருவங்கள்வரை காணப்படுகின்றன. இவற்றில் சிறப்பானதாக வாய் திறந்தநிலையில் புலி ஒன்றும் உள்ளது.
வேட்டையாடும் மனிதர்கள் என சுமார் 50 லிருந்து 60 உருவங்கள்வரை காணப்படுகின்றன. இவற்றில் சிறப்பானதாக வாய் திறந்தநிலையில் புலி ஒன்றும் உள்ளது.
கோயிலுக்குள் போகவேண்டுமெனில் ஓவியங்கள் உள்ள பாறையின் கீழேயே ஒருஆள் போகுமளவிற்கு உள்ள நுழைவுவாயில் வழியே தவழ்ந்தவாறு உள்ளே செல்லவேண்டும். பாறைஓவியங்களைப்பற்றி தெரியாததால் கோயிலுக்கு மேலே பாறையில் சுண்ணாம்பு அடித்துப் பல ஓவியங்களை மறைத்துவிட்டனர்.
குறும்பபாளையம் அரசுப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் விஜயராகவன் அவர்களால் கண்டுபிடிக்கப்பட்டு காந்திராஜன் அவர்களால் ஆய்வு செய்யப்பட்டும் வெளியுலகிற்குத் தெரியவந்துள்ளது காலத்தை கடந்து கம்பீரமாக நிற்கும் இவ்ஓவியங்கள்.
- பாலா பாரதி
No comments:
Post a Comment