Sunday, 31 December 2023

பெரியகோட்டப்பள்ளி

பெரியகோட்டப்பள்ளி


             மறுநாள் அதிகாலையே கிளம்பிவிட்டோம் இன்று இரண்டு பாறை ஓவியங்களையாவது பார்த்துவிடவேண்டும் என்ற முனைப்பில். முதலில் நாங்கள் சென்றது பெரியகோட்டப்பள்ளிக்கு. கிருஷ்ணகிரியிலிருந்து  பெரியகோட்டப்பள்ளியை அடைந்தோம். அங்கே எங்களுக்காக திரு முருகானந்தம் காத்திருந்தார், இவர்தான் இவ்வோவியங்களைக் கண்டுபிடித்தவர். வண்டியை நிறுத்திவிட்டு    மலை ஏற ஆரம்பித்தோம். பெரிய மலை என்று சொல்லமுடியாது, அரைமணி நேரத்திலேயே ஓவியங்கள் வரையப்பட்டுள்ள பாறையை அடைந்தோம். சுமார் 20 அடி நீளமுள்ள பாறையில் வெள்ளை நிறத்தில் வரையப்பட்டுள்ளன. 50க்கும் மேற்பட்ட ஓவியங்கள் கொண்ட தொகுப்பில் பெரும்பாலானவை குறியீடுகளாகவும் என்னவென்று தெரிந்துகொள்ள முடியாத உருவங்களாகவும் உள்ளன. ஆய்வுக்காக அவற்றையெல்லாம் பதிவு செய்துகொண்டு மலையைவிட்டு இறங்க ஆரம்பித்தோம்.

No comments:

Post a Comment