ரோமானிய எழுத்துக்களுடன் பானைகள்: தொல்பொருள் ஆய்வில் கண்டெடுப்பு : கீழடி பள்ளிச்சந்தையில் ஆய்வு
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி பள்ளிச்சந்தை திடலில் மத்திய தொல்பொருள் துறையினர் நீண்ட அகழ்வாராய்ச்சியை மேற்கொண்டுள்ளனர்.மத்திய தொல்பொருள் துறை கண்காணிப்பாளர் (தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகம்) தலைமையில் சென்னை பல்கலைகழக ஆராய்ச்சி பிரிவு மாணவர்கள் உட்பட 30 பேர் கொண்ட குழு இரு மாதங்களாக ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
பண்டைய வணிக நகரமான 'மதுரை நகரம்' முற்றிலும் அழிந்து விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்த முழுமையான ஆய்வு இதுவரை நடத்தப்படவில்லை. முதன் முறையாக மத்திய அரசு தொல்லியல்துறைக்கு ஒருவருட ஆய்வு மேற்கொள்ள அனுமதி அளித்து பணிகள் நடந்து வருகிறது.
தற்போதைய ஆய்வில் பண்டைய மதுரை நகரம் வணிக நகரமாக திகழ்ந்ததற்கான சான்று கிடைத்துள்ளது. ராமேஸ்வரத்தில் இருந்து மதுரைக்கு ஏராளமான வணிகர்கள் வந்து சென்றுள்ளனர். அப்போது அவர்கள் பயன்படுத்திய பொருட்கள், நாணயங்கள், குறியீடுகள், தங்குமிடம் உள்ளிட்டவற்றை தேடும் பணி நடைபெறுகிறது.
மதுரை நகரை ஒட்டி வைகையாறு செல்லும் பாதையில் 12 கி.மீ., தூரத்திற்குள் இந்த அகழ்வாராய்ச்சி பணி நடைபெறுகிறது.

ராமேஸ்வரம் துறைமுகத்தில் இறங்கிய வணிகர்கள், வைகை ஆறு வழியாக வந்து கரையோரத்தில் வணிகத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது என்றும், இதனை மையமாக வைத்தும் இந்த அகழ்வாராய்ச்சி பணி நடைபெறுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரோமானிய குறியீடுகள்: தமிழகத்தில் 1963 முதல் 1973 வரை காவிரிபூம்பட்டினத்தில் நடந்த அகழ்வாராய்ச்சிக்கு பிறகு மதுரை நகரை ஒட்டி மிக நீண்ட கால அகழ்வாராய்ச்சி பணி நடைபெறுகிறது. தற்போதைய அகழ்வாராய்ச்சி பணியில் ரோமானிய குறியீடுகளுடன் கூடிய பானைகள், பாண்டிய மன்னர் காலத்தில் பயன்படுத்திய முத்து மாலைகள் கண்டறியப்பட்டுள்ளன. பழங்காலத்தில் பயன்படுத்திய அகலமான செங்கற்களுடன் கூடிய கட்டுமான அறைகள், தொட்டிகள் ஆகியவற்றையும் தற்போது கண்டறிந்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள கீழடி பள்ளிச்சந்தை திடல் என்றழைக்கப்படும் இடத்தில் சோனை மகன் சந்திரன், அப்துல் ஜபார் மகன் திலிப்கான் என்பவரது இடங்களில் 5மீட்டர் ஆழம், 5மீட்டர் அகலம் கொண்ட குழிகள் வெட்டப்பட்டு அகழ்வராய்ச்சி பணி நடைபெறுகிறது.
தொல்லியல்துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் கூறுகையில்,' தென் தமிழகத்தில் மதுரையை மையமாக கொண்டு பாண்டிய மன்னர்களின் ஆட்சிகாலம் குறித்த முதல் அகழ்வராய்ச்சி இது. குந்திதேவி நகரம் என்பது தான் மருவி கொந்தகையாக மாறியது என்பது வரலாற்று ஆசிரியர்களின் கருத்து. இதனை உண்மையா என ஆராய இந்த பணி நடைபெறுகிறது. பாண்டிய மன்னர்களின் ஆட்சியில் வணிகம் சிறப்பாக நடந்தது என்பதற்கான பல்வேறு சான்றுகள் இரண்டு மாத ஆராய்ச்சியில் கிடைத்துள்ளன.

ரோமானிய குறியீடுகளுடன் கூடிய மண் பானை துண்டுகள், பாண்டிய மன்னர்கள் காலத்திய முத்து மாலைகள், அவர்கள் தங்குமிடம் உள்ளிட்ட பல்வேறு சான்றுகள் கிடைத்துள்ளன. மேலும் மண்பானைகளில் கருப்பு, சிவப்பு உள்ளிட்ட இரண்டு வர்ணங்கள் மட்டுமே உள்ளன. தண்ணீர் ஊற்ற பயன்படும் 'ஜக்' போன்ற அமைப்பின் வாய்ப்பகுதி கிடைத்துள்ளது. பெரிய அகலமான செங்கற்கள் கொண்ட வீட்டின் ஒரு பகுதி மட்டும் முழுமையாக உள்ளது. பள்ளிச்சந்தை திடல் என்பது வணிகர்கள் திடல் என்பதால் இங்கு பணிகளை மேற்கொண்டுள்ளோம். மார்ச் முதல் அடுத்த ஆண்டு மார்ச் வரை அகழ்வராய்ச்சி பணி நடைபெறும். இதுவரை 19 இடங்களில் பணிகள் மேற்கொண்டு ஆதாரங்களை சேகரித்துள்ளோம்,' என்றார்.
சங்க காலத்திலேயே வெளிநாடுகளோடு வர்த்தகம்: வணிகப் பெருவழிப் பாதையில் அமைந்த நகரம்சிவகங்கை மாவட்டம், திருப்பு வனம் அருகே கீழடி பள்ளிச்சந்தை புதூரில் இரண்டாயிரம் ஆண்டு களுக்கு முன்பு வாழ்ந்த சங்ககாலத் தமிழர்கள், அப்போதே வெளிநாடுகளோடு வாணிபத் தொடர்பு வைத்திருந்ததற்கான தடயங்கள், சான்றுகள் மத்திய தொல்பொருள் துறையினரின் அகழ்வாராய்ச்சியில் கிடைத் துள்ளன.
ராமேசுவரம் அழகன்குளம் துறைமுகப்பட்டினத்துக்குச் செல்லும் வணிக பெருவழிப் பாதை யில், மதுரைக்கு அருகே அமைந் திருந்திருந்த வணிக நகரமாக இது இருந்துள்ளதாக தொல்லிய லாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பெங்களூருவில் உள்ள இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையின் அகழ்வாராய்வுப் பிரிவு சார்பில், திருப்புவனம் அருகே கீழடி பள்ளிச்சந்தைபுதூரில் கடந்த மார்ச் மாதம் முதல் அகழ்வா ராய்ச்சி நடந்து வருகிறது. மத்திய தொல்லியல்துறை கண்காணிப் பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் உதவி தொல்லிய லாளர்கள் எம். ராஜேஷ், என். வீர ராகவன் அகழ்வாராய்ச்சி செய்து வருகின்றனர்.
இதில், சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தொன் மையான நகரம் புதையுண்டி ருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட மண்பாண்ட ஓடு களும் கிடைத்துள்ளன.
இதுகுறித்து உதவி தொல்லிய லாளர் எம். ராஜேஷ் கூறியது:
கீழடி பள்ளிச்சந்தைபுதூரில் நடக்கும் அகழ்வாய்வில் சூது பவளம், பளிங்கு, அகேட் மணிகள், பச்சை, மஞ்சள், நீல நிறக் கண்ணாடி மணிகள் கிடைத்துள்ளன. இப்பகுதியில் வாழ்ந்த மக்கள் உள்நாட்டின் பிற பகுதிகளோடு வாணிபத் தொடர்பில் இருந்துள்ளனர்.
வரலாற்றின் தொடக்க காலத்திய செங்கல் கட்டிடச் சான்றுகள் கிடைப்பது மிகவும் அரிது. ஆனால், இங்கு அதிக அளவில் செங்கல் கட்டிடங்கள் உள்ளது ஆச்சரியமளிக்கிறது. குறிப்பாக, தென்தமிழகத்தில் அகழ் வாய்வில் கிடைக்கும் வெள்ளை வர்ணம் தீட்டப்பட்ட கருப்பு, சிவப்பு மண்பாண்டங்களும் இங்கு அதிகம் கிடைத்துள்ளன.
இதுவரை, தமிழகத்தில் கொங்கு பகுதியில் மட்டும் கிடைத்த ரசட் கலவை பூசப்பட்ட மண்பாண்டங்களும் இங்கு கிடைத்துள்ளன. ரசட் கலவையின் தாக்கம் இருப் பதை பார்க்கும்போது, கொங்கு பகுதியோடு இப்பகுதி மக்கள் வாணிபத் தொடர்பில் இருந் துள்ளது தெரியவந்தது.
சங்க காலத்தில் வைகை நதியின் வலது கரையில், பண்டைய வணிக பெருவழிப் பாதை இருந் துள்ளது. மதுரையிலிருந்து ராமேசு வரம் அழகன்குளம் துறைமுகப் பட்டினத்துக்கு கீழடி திருப்புவனம் வழியாக பாதை இருந்துள்ளது. மதுரைக்கு அருகாமையிலேயே உள்ள இந்த ஊர், வணிக நகரமாக இருந்துள்ளது. ஆனால், இந்நகரத்தின் பெயர் பற்றிய ஆதாரம் இன்னும் கிடைக்க வில்லை.
தமிழக தொல்லியல் துறையினர் ஏற்கெனவே மேற்கொண்ட ஆய்வில், ராமேசுவரம் அழகன் குளம் சங்ககால பாண்டியர் காலத்தில் துறைமுகப்பட்டினமாக இருந்ததற்கான சான்றாதாரங்கள் கிடைத்துள்ளன.
அழகன்குளத்தில் நடந்த அக ழாய்வில் பண்டைய ரோமானிய நாட்டின் உயர்ரக ரவுலட், ஹரிட்டைன் மண்பாண்டங்கள் கிடைத்தது போன்று, கீழடி பள்ளிச்சந்தை புதூரிலும் கிடைத்துள்ளது. அந்தவகையில் அழகன்குளம் துறைமுகப் பட்டினத்தையும் மதுரையையும் இணைக்கும் இடமாக கீழடி பள்ளிச்சந்தை புதூர் இருந்தி ருக்கலாம். மேலை நாடுகளுக்கு கடலில் பிரயாணம் செய்யும் வணிகர்கள் இந்த ஊரின் வழியாகச் சென்றிருக்கலாம். இங்கு கிடைத்துள்ள தடயங்கள், சான்றுகள் மூலம் இதை உறுதி யாகக் கூறலாம். அந்த வகையில் இந்த இடம் வரலாற்று முக்கியத்துவம் பெறுகிறது. குறிப்பாக, தென்தமிழகத்தின் தொல்லியல் வரலாற்றை அறி யவும், வரலாற்று தொடக்க கால மான இரும்புக் காலத்தில் ஏற்பட்ட பண்பாட்டு உருமாற்றத்தை அறிந்து கொள்வதற்கும் இந்த அகழ்வாராய்ச்சி பேருதவியாக இருக்கும். மதுரையின் தொன் மையை அறியவும், இந்த ஆய்வு உறுதுணையாக இருக்கும் என்றார்.

இதுகுறித்து மத்திய தொல்லியல் துறை கண் காணிப்பாளர் அமர்நாத் ராம கிருஷ்ணன் கூறியதாவது:
செவிவழிச் செய்தி களில் குறிப்பிடப்படும் தகவல்களை உரிய கல் வெட்டுகள், சான்றுகளு டன் நிரூபிப்பது அகழ்வா ராய்ச்சியாகும். 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தொன்மையான நகரமான மதுரை குறித்து நடை பெறும் முதல் விரிவான அகழ்வாராய்ச்சி இது வாகும். தற்போது மதுரை வளர்ச்சியடைந்த நகராக உள்ளது. அங்கு அகழ்வா ராய்ச்சி செய்வது சிரம மான காரியம்.
எனவே, மதுரையை ஒட்டிய தொன்மையான பெயரில் தற்போதும் வழங்கப்படும் கிராமங்கள் குறித்து ஆய்வு மேற் கொண்டோம்.
பழைய நூல்களில் குறிப்பிட்டுள்ளபடி வைகை நதி தொடங்கும் இடத்தில் இருந்து கடலில் கலக்கும் ராமநாதபுரம் அழகன்குளம் வரை 293 இடங்களில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பாண்டியர்கள் ஆட்சிக் காலத்தில் மணலூர் கிரா மம் தலைநகராக இருந் ததாக செவிவழிச் செய்தி ஒன்றுள்ளது.

அதனை நிரூபிக்கும் வகையில், அந்தக் கிராமத்தைச் சுற்றி கல்வெட்டுகள், முதுமக் கள் தாழிகள் போன்றவை ஏராளமாக கண்டெடுக் கப்பட்டுள்ளன. அதில், சங்க காலத்தில் குறிப் பிடப்பட்ட குந்திதேவி சதுர்வேதிமங்கலம் என் பது மருவி தற்போது கொந்தகையாக உள்ளது.
திருபுவனம் அருகே கீழடி பள்ளிச்சந்தை புதூர் என்பது வணிகர்களோடு தொடர்புடைய ஊர் என்பதை கண்டறிந்தோம். இங்கு நடத்தப்பட்ட அக ழாய்வில் சங்க கால வீடுகள், அம்மக்கள் பயன் படுத்திய வீட்டு உபயோ கப் பொருள்கள், உலோ கங்கள், கண்ணாடி, மண் பாண்டங்கள், அணிகலன் கள் கிடைத்து வருகின் றன.
மேலும் வெளிநாடு களோடு வணிகத் தொடர் பில் இருந்ததற்கான ஆதாரமாக ரோமானிய நாட்டின் உயர்ரக மண் பானைகளான ரவுலட் மற்றும் ஹரிட்டைன் மண்பாண்ட ஓடுகளும் கிடைத்துள்ளன.
மேலும் பானையின் உட்புறம் கருப்பாகவும், வெளிப்புறம் சிவப்பாகவும் உள்ள அரிதான மண் பாண்டமும் கிடைத்துள் ளது. பழங்கால பொருள் கள் தொடர்ந்து கிடைத்து வருவதால், ஆராய்ச்சிக் காலத்தை நீட்டிக்கும்படி அனுமதி கேட்டுள்ளோம். இந்த அகழ்வாராய்ச்சிக்கு, பள்ளிச்சந்தை புதூரைச் சேர்ந்த சோணை மகன் சந்திரன், அப்துல்ஜபார் மகன் திலீப்கான் ஆகி யோர் அவர்களது சொந்த தென்னந்தோப்பை மன முவந்து வழங்கி உள்ள னர் என்றார்.
திணையகம் added 2 new photos.
தமிழகத்தில் நகர நாகரிகம் இருந்ததற்கான ஆதாரம்: சிவகங்கை அருகே புதையுண்டுள்ள ஏராளமான சங்க காலக் கட்டிடங்கள், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டெடுப்பு
-------------------------------------------------------------------------
சிவகங்கை மாவட்டம் கீழடி பள்ளிச் சந்தைபுதூரில் நடைபெறும் அகழ் வாய்வில், நகர நாகரிகம் இருந்ததற்கு அடையாளமாக சுடுமண் குழாய் மூலம் உருவாக்கப்பட்ட கழிவுநீர் கால்வாய் வசதியுடன் கட்டிடங்கள் இருந்தது கண்டறியப் பட்டுள்ளன. மேலும், 3 ஆயிரத்துக் கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கிடைத்துள்ளன.
-------------------------------------------------------------------------
சிவகங்கை மாவட்டம் கீழடி பள்ளிச் சந்தைபுதூரில் நடைபெறும் அகழ் வாய்வில், நகர நாகரிகம் இருந்ததற்கு அடையாளமாக சுடுமண் குழாய் மூலம் உருவாக்கப்பட்ட கழிவுநீர் கால்வாய் வசதியுடன் கட்டிடங்கள் இருந்தது கண்டறியப் பட்டுள்ளன. மேலும், 3 ஆயிரத்துக் கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கிடைத்துள்ளன.
பெங்களூருவில் உள்ள மத்திய தொல்பொருள் துறை அகழ்வாய்வு பிரிவு சார்பில் சிவகங்கை மாவட் டம், திருபுவனம் அருகே கீழடி பள்ளிச்சந்தைபுதூரில் இரண்டாம் கட்ட அகழ்வாய்வுப் பணிகள் ஜனவரி 18 முதல் நடைபெற்று வருகின்றன. தொல்பொருள் துறை கண்காணிப்பாளர் கே.அமர்நாத் ராமகிருஷ்ணா தலைமையில் உதவி தொல்லியலாளர்கள் ராஜேஷ், வீரராகவன், தொல்லியல் துறை மாணவர்கள் உள்ளிட்டோர் அகழ் வாய்வுப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
முதல்கட்ட ஆய்வில் கிடைத்ததைவிட இரண்டாம்கட்ட அகழ்வாய்வில் 10-க்கும் மேற்பட்ட சங்க கால கட்டிடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஹரப்பா நாகரிகம் போன்று கழிவுநீர் கால்வாய் வசதியுடைய கட்டிட அமைப்புகள் இருந்தது தெரியவந்துள்ளது.
அக்கால மக்கள் பயன்படுத்திய சுடுமண் முத்திரைக் கட்டைகள், எழுத்தாணிகள், அம்புகள், இரும்பு, செம்பு ஆயுதங்கள், அரிய வகை அணிகலன்கள், 18 தமிழ் பிராமி எழுத்துகளையுடைய மட்பாண்ட ஓடுகள் உட்பட 3,000-க்கும் மேற் பட்ட தொல்பொருட்கள் கிடைத்துள் ளன. இதுகுறித்து தொல்பொருள் துறை கண்காணிப்பாளர் கே.அமர் நாத் ராமகிருஷ்ணா, ‘தி இந்து’விடம் கூறியதாவது:
தமிழகத்தில் அகழ்வாய்வில் கட்டிடங்கள் கண்டறியப்படுவது மிகவும் அரிய விஷயம். ஆனால், கீழடியில் 53 அகழ்வாய்வுக் குழிகள் தோண்டியதில் 10-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் கண்டறியப்பட்டுள் ளன. கடந்த ஆண்டு சங்க காலத் தைப் பற்றிய பல ஆதாரங்கள் கிடைத்தன. அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு இரண்டாம்கட்ட அகழ்வாய்வில் சங்க கால கட்டி டங்கள் அதிக அளவில் கண்டறியப் பட்டுள்ளன. ஒரு நகர நாகரிகம் இருந்ததற்கான ஆதாரங்கள் கீழடியில் எதிர்பார்த்ததைவிட அதிக மாகவே கிடைத்துள்ளன. இந்த அகழ்வாய்வில் சங்க கால கட்டி டங்கள் குறித்து விரிவான ஆய்வு செய்ய உள்ளோம்.
அரிக்கன்மேடு, காவிரிபூம்பட்டி னம், உறையூர் போன்ற அகழ் வாய்வில் கிடைத்ததைவிட கீழடியில் அதிக எண்ணிக்கையில் தொடர்ச்சியாக பல கட்டிடங்கள் கண்டறியப்பட்டு வருகின்றன.
சங்க காலத்தில் கட்டிடங்களே இல்லை என்ற கூற்றை இந்த அகழ்வாய்வு மாற்றியமைத்துள் ளது. கீழடியில் கண்டறியப்பட்டுள்ள கட்டிடங்கள் மூலம் ஒரு நகர நாகரிகம் இருந்ததற்கான அத்தனை அடிப்படை ஆதாரங்களும் கிடைத் துள்ளன. சங்க கால கட்டிடங்களின் முழுமை, அதன் தன்மை, விரிவாக் கம் எவ்வாறு இருந்தது என்பதை ஆய்வு செய்ய உள்ளோம்.
முழுமையான கட்டிடங்கள், செவ்வகம், சதுரம் வடிவிலான செங் கலால் ஆன கட்டிடங்கள் கண்டறி யப்பட்டுள்ளன. மேலும் ஹரப்பா நாகரிகம் போன்று சுடுமண் கழிவு நீர் கால்வாய் வசதியுடைய கட்டிட அமைப்புகளும் கண்டறியப்பட் டுள்ளன.
தமிழகத்தில் இதுவரை நடை பெற்ற அகழ்வாராய்ச்சியில் இப் போதுதான் முதல்முறையாக சுடு மண் முத்திரை (ஷீல்) கிடைத் துள்ளது. இது கலை வேலைப் பாடுடன் கூடியதாகவும் உள்ளது. தற்போது ரப்பர் ஸ்டாம்ப் பயன் படுத்துவதுபோல், அக்கால மக்கள் தங்களது வாணிப நோக்கத்துக்காக இந்த முத்திரைக் குறியீட்டை பயன் படுத்தி இருக்க வேண்டும். இது போல் 3,000-க்கும் மேற்பட்ட தொல் பொருட்கள் கிடைத்துள்ளன என்றார்.
(தி இந்து 30.05.2016)
படம்:
1.சுடுமண்ணாலான குழாய் மூலம் கழிவுநீர் வெளியேற்றும் வசதியுடன் கூடிய கட்டிடம்
2. சங்க கால மக்கள் பயன்படுத்திய சுடுமண் முத்திரை
1.சுடுமண்ணாலான குழாய் மூலம் கழிவுநீர் வெளியேற்றும் வசதியுடன் கூடிய கட்டிடம்
2. சங்க கால மக்கள் பயன்படுத்திய சுடுமண் முத்திரை
No comments:
Post a Comment