கிருஷ்ணகிரியிலுள்ள மல்லச்சந்திரம் கல்திட்டைகள் புகழ்பெற்றவை. அவற்றைப் பார்க்க திரு.சுகவன முருகன் நம்மை அழைத்திருந்தார். அவர் அழைப்பையேற்று கிளம்பிவிட்டேன். திரு.கே.டி.காந்திராஜன் மதுரையிலிருந்து திருச்சி வந்து நம்முடன் இணைந்துக்கொள்ள, நாங்கள் இருவரும் கிருஷ்ணகிரி நோக்கிப்பயணித்தோம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வட்டம் சூளகிரிக்கு அருகில் அமைந்துள்ள சிற்றூர் பீர்பள்ளி-மல்லச்சந்திரம். இங்குள்ள மோரல்பாறை என்றழைக்கப்படும் குன்றுகளில் பெருங்கற்கால ஈமச்சின்னங்களானக் கல்திட்டைகள் பெரும் எண்ணிக்கையில் உள்ளன. ஈமச்சின்னங்கள் என்றால் இறந்தவர்களை அடக்கம் செய்யும்போது செய்யப்படும் கட்டுமானங்கள் எனலாம்.
காவிரிப்பட்டினத்தில் தங்கியிருந்த எங்களை முருகன் சந்தித்து மதியஉணவக்குப்பிறகு மல்லச்சந்திரம் அழைத்துச்சென்றார். வழியில் நண்பர் திரு. சிவா இணைந்துக்கொண்டார். கிருஷ்ணகிரி ஒசூர் சாலையில் பீர்பள்ளி எனும் ஊரிலிருந்து வலப்புறம் திரும்பி எங்கள் வாகனம் சென்றுகொண்டிருந்தது. மூன்று கிலோமீட்டர்கள் பயணித்திருப்போம், மல்லச்சந்திரம் எனும் சிற்றூர் எங்களை வரவேற்றது. மாலைவேளையாதலால் வெயில் கடுமையாக இல்லை, சிறியமலையாகவேறு இருந்ததால் எளிதாகவே ஏறிவிட்டோம்.
அங்கே! 3000 வருடங்களுக்கு முந்தைய மாபெரும் ஈமக்காடு எங்கள் கண்முன்னே விரிந்திருந்தது. ஆமாம் ஈமக்காடுதான் இங்கு பெருங்கற்கால மக்கள் தங்கள் முன்னோர்களுக்காக ஏற்படுத்தியிருந்த காலத்தால் அழியாத நினைவுச் சின்னங்கள் அவை.
கொஞ்சம் பொறுங்கள் காலத்தால் அழியாத என்று அவசரப்பட்டுக் கூறிவிட்டேன் என்று நினைக்கிறேன். அந்தோ பரிதாபம் இவற்றில் பெருமளவு அழிக்கப்பட்டிருக்கின்றன. காலம் அவற்றை அழிக்கவில்லை. காலத்தினூடே பயணம் செய்தப் பொறுப்பற்ற மனிதர்களால் தங்கள் சுயநலம்வேண்டச் சிறுபொருள்களுக்காக வரலாற்றுப் பொக்கிஷங்கள் அழிக்கப்பட்டதைப் பார்த்துத் திகைத்து நின்றோம்.
இக்கல்திட்டைகளில் புதையல் இருப்பதாக நம்பிக்கொண்டிருந்த கயவர்களால் சூறையாடப்பட்டிருந்தது நம் முன்னோர்களின் நினைவுச் சின்னங்கள். கற்களைப் பெயர்த்தெடுத்துத் தோண்டிப்பார்த்துள்ளனர் உள்ளே ஏதேனும் கிடைக்குமா என்று. உள்ளே எலும்புக்கூடுகளையும் அம்மக்களின் அன்றாடப் பயன்பாட்டுப் பொருள்களையும் மட்டுமே கண்டிருப்பார்கள். ஈமச்சின்னங்களைச் சிதைப்பதென்பது உலக அளவில் நடந்துள்ளது. எகிப்திலும் கூட பிரமிடுகளையும் சிதைத்துள்ளனர் என்று வேண்டுமானால் நமக்கு நாமே சமாதானம் கூறிக்கொள்ளளாம்.
இப்படி எண்ணி வருந்திக்கொண்டிருந்த நம்மை அருகில் வந்து நின்ற ஒர் ஆட்டுக்குட்டி நிகழ்காலத்திற்கு அழைத்து வந்தது. அதை பிடிக்க ஆடுபோன்றே கத்திக்கொண்டே ஒரு பெண் முயன்றுக்கொண்டிருந்தது வேடிக்கையாக இருக்க அதை வெகுநேரம் ரசிக்கமுடியவில்லை , ஏனெனில் சூரியன் மேற்கே மறையத்தொடங்கியிருந்தது. நாங்கள் விரைவாக எங்கள் பணியைச் செய்ய ஆரம்பித்தோம். நான் படமெடுத்துக்கொண்டேன். காந்திராஜன் குறிப்பேட்டில் வரைந்துக்கொண்டார். முருகன் அளவுகளையும் எண்ணிக்கைகளையும் குறித்துக்கொண்டார்.
பெருங்கற்காலம் என்றால்?
பெருங்கற்காலம் என்பது பெரிய கற்களைக் கொண்டு அமைப்புகளை மக்கள் உருவாக்கிய காலப் பகுதியைக் குறிக்கும். இத்தகைய அமைப்புகள் பெரும்பாலும் இறந்தவர்களுடைய புதை குழிகளின் மேல் அமைக்கப்பட்டன.
இதனால் இக்காலத்தைப் பெருங்கற்படைக் காலம் எனலாம்.
இக் காலத்தைச் சேர்ந்த பெருங்கல் அமைப்புகள் கற்பதுக்கைகள் (cist), கல்திட்டைகள் (dolmen), கற்குவை (cairn), பரல் உயர் பதுக்கை (cairn circle), தொப்பிக்கல் (hood stone), குடைக்கல் (umbrella stone), நெடுநிலை நடுகல் (menhir) எனப் பல வகைகளாக உள்ளன. இவற்றில் மல்லச்சந்திரத்தில் இருப்பவைக் கற்திட்டைகள் ஆகும்.
கற்திட்டைகள் எவ்வாறு இருக்கும்?
கற்திட்டைகள் பொதுவாக மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட செங்குத்தானக் கற்பலகைகளையும், அவற்றினால் கிடைநிலையில் தாங்கப்படும் பெரியத் தட்டையானக் கற்பலகை ஒன்றையும் கொண்டிருக்கும்.
கல்திட்டைகள் உலகின் பல பகுதிகளிலும் காணப்படுகின்றன. பெருங்கற்காலப் பண்பாடு உலகின் வெவ்வேறுப் பகுதிகளில் வெவ்வேறு காலக்கட்டங்களில் காணப்பட்டதினால் இப் பண்பாட்டுச் சின்னமான கல்திட்டைகளின் காலமும் நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றன.
மல்லச்சந்திரத்தில் இயற்கையாக அமைந்த விரிந்த கற்பாறையின் மேல் நான்குப் பக்கங்களிலும் நான்கு பெரியக் கற்பலகைகளை ஒன்றுடன் ஒன்று தாங்கி நிற்கின்ற அமைப்பில் கல்லறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதிலுள்ள நான்குச் சுவர்களில் கிழக்குப்பகுதியிலுள்ளக் கற்பலகையில் வட்ட வடிவில் இடுதுளை ஒன்றும் 40 செ. மீ முதல் 50. செ.மீ விட்டத்தில் காணப்படுகிறது. மைய அறையிலிருந்து 70. செ.மீ தூரத்தில் பக்கத்திற்கு ஒன்று வீதம் உயரமானக் கற்பலகைகள் நான்குப் பக்கங்களிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்தக் கற்பலகையின் அடிப்பகுதி சமமாகவும் மேல்பகுதி அரைவட்ட வடிவிலும் காணப்படுகின்றன. இவை நன்கு செதுக்கப்பட்டவை போன்றும் ஒரே மாதிரியான அமைப்பிலும் காணப்படுகின்றன.
இங்குள்ள கல்திட்டைகளின் சிறப்பு சிலவற்றில் இரட்டை இடுதுளைகள் மற்றும் இச்சின்னங்களுள் வரையப்பட்டுள்ள ஓவியங்களுமாகும்! இங்குள்ள பத்துக்கும் மேற்பட்ட கல்திட்டைகளில் வெள்ளைவண்ண ஓவியங்கள் காணப்படுகின்றன. கோடுகளால் ஆன முக்கோண அமைப்புடைய மனித உருவங்கள், மலைகள், மரங்கள், புலியின் மேல் அமர்ந்த நிலையிலுள்ள மனித உருவம் சிறப்பானதாக உள்ளது. தனியாக புலியின் உருவம் மிகச்சிறப்பாக வரையப்பட்டுள்ளது.
எதற்கு இந்த இடுதுளை?
இறந்தவர்களின் ஆவி உள்ளேயிருந்து வெளியே போவதற்கும் வெளியே சென்று விட்டு உள்ளே திரும்புவதற்குமான வழியே அந்த இடுதுளை, உடல் அழியக்கூடியது, ஆவி அழியாதது என்கிற நம்பிக்கை மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்கள் மத்தியில் நிலவியுள்ளது என்று இதன்மூலம் நாம் புரிந்துகொள்ள முடிகிறது.
இது போன்ற திட்டைகள் நம் நாட்டில் மட்டுமன்றி. மேலை நாடுகளிலும் உள்ளன. இவை பற்றி விரிவாக பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஜெர்மனியில் வாழ்ந்த மானிடவியல் ஆய்வார் ப்ரேசர் என்பவர் பன்னிரண்டு தொகுதிகளாகப் புத்தகங்களை எழுதிக் குவித்துள்ளார் . மல்லசந்திரம் கற்கிடைப்பகுதி ஒரு மலைமீது அமைந்துள்ளது. இது பண்டைய ஈமச்சின்னங்களின் காடு என்றே சொல்லலாம். தாழிகள், ஈமப்பேழைகள் எனப் பண்டைய மட்பாண்டங்களில் எத்தனை விதங்கள் உண்டோ அத்தனையும் இந்தப் பெருங்கற்கால ஈமச்சின்னங்களில் கிடைக்கின்றன. எகிப்து பிரமிடுகள் போன்றுக் காப்பாற்றப்பட வேண்டிய முக்கியமான பகுதி இது.
இம்மலையிலிருந்து அடுத்த மலையைப் பார்த்தால் அங்கும் இதேபோன்ற சிதைக்கப்பட்ட கல்திட்டைகள் பரிதாபமாக நம்மைப் பார்த்துக்கொண்டிருந்தன. இவை கிட்டத்தட்ட அழிந்துவிட்ட நிலையிலேயே உள்ளன. இருப்பதையாவது நமது வருங்காலச் சந்ததிகளுக்குப் பாதுகாக்கவேண்டிய கடமை நமக்குள்ளது. இல்லையெனில் அயல்நாட்டினரால் நமக்கு அடையாளம் காட்டப்பட்டு, நம்மாலேயே அழிக்கப்பட்டு, நாம், வரலாற்றில் இடமின்றி நிற்கும் பரிதாப நிலையைச் சந்திக்க வேண்டிவரும் என்பதில் ஐயமில்லை.
அம்மலை மெல்ல இருளின் பிடியில் ஆட்பட ஆரம்பித்திருந்தது. நாங்கள் சற்று விரைவாகவே இறங்க ஆரம்பித்தோம். முழுவதுமாக இருட்டவும் நாங்கள் எங்கள் வாகனத்தை அடையவும் சரியாக இருந்தது. காவிரிப்பட்டினத்தில் எங்கள் அறைக்கு வந்து எங்கள் குறிப்புகளைப் பரிமாறிக்கொண்டும் ,அடுத்த நாள் பயணத்தைத் திட்டமிட்டுக்கொண்டும் இருந்ததில் இயல்பான அயர்ச்சியால் உறங்கிப்போனோம்.
மறுநாள் நாங்கள் போகத் திட்டமிட்டது....
தழிழ்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் பாறை .ஓவியம்
"மல்லப்பாடி பாறைஓவியங்கள்"
...பயணம் தொடரும்
...பாலா

No comments:
Post a Comment