Monday, 25 December 2023

எக்ஸ்ரே ஓவியங்கள்

 பாறைஓவியங்களில் காணப்படும் சிறப்புகளுள் ஒன்று விலங்குகளின் உள்ளுருப்புகள் தெரியும்படி வரையப்பட்டுள்ள 'எக்ஸ்ரே ஓவியங்கள்' ஆகும். இவ்வகை ஓவியங்கள் தமிழ்நாட்டில் ஆலம்பாடி, செத்தவரை உட்பட பல இடங்களில் காணப்படுகின்றன. உடலின் உள் உறுப்புகளைக் காட்டுமாறு வரையப்படும் இவ்வோவியங்கள் வெளிநாடுகளிலும் உள்ளன.

கரிக்கியூரில் காணப்படும் மாட்டோவியத்தில் மாட்டின் எழும்புகள் காட்டப்பட்டுள்ளன. வெள்ளை நிறத்தில் வரையப்பட்ட ஓவியத்தின் மீது செங்காவி நிறத்தில் அதே ஓவியத்தை மீண்டும் வரைந்துள்ளதைப் பார்க்கமுடிகிறது.
- பாலா பாரதி


No comments:

Post a Comment