கொங்கர் புளியங்குளம்
30-07-2015 (வியாழக்கிழமை) அன்று பாறைஓவியங்கள் ஆய்வுக்காக மதுரைக்கருகில் கொங்கர் புளியங்குளம் சென்றோம். அங்கு நேரில் கண்டவற்றை எழுதுகிறேன் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்.
மதுரையில் இருந்து சுமார் 15 கிமீ தொலைவில் மதுரை தேனி சாலையில் காமராசர் பல்கலைகழகத்தை அடுத்து வலப்புறம் அமைந்துள்ளது இவ்வூர். நாகமலைத் தொடரின் தென் பகுதியில் அமைந்துள்ள இந்த குன்றில் இயற்கையான குகைத்தளம் அமைந்துள்ளது. மலையடிவாரத்தில் மாயன் கோயில் உள்ளது. இக்கோயிலின் பின்பகுதிப் பாறையில் சென்னிற பாறை ஓவியமும் மனித உருவத்துடன் கோட்டுருவமும் இருந்ததைப் பார்த்தோம்.
ஒரு கல்குவாரி அதன் நடுவில் ஒரு ஒத்தையடிப் பாதை அதில் நடந்து சென்றால் மீண்டும் ஒரு கல்குவாரி அதையும் தாண்டி சிமென்ட் சாலையில் சென்று மீண்டும் ஒத்தையடிப் பாதையில் சென்றால் ஒரு நீண்ட மலை உள்ளது.
ஒரு கல்குவாரி அதன் நடுவில் ஒரு ஒத்தையடிப் பாதை அதில் நடந்து சென்றால் மீண்டும் ஒரு கல்குவாரி அதையும் தாண்டி சிமென்ட் சாலையில் சென்று மீண்டும் ஒத்தையடிப் பாதையில் சென்றால் ஒரு நீண்ட மலை உள்ளது.
மேடை அமைத்து தொல்லியல்துறையால் செய்யப்பட்ட தகவல்பலகை கல்வெட்டுகள் இரண்டு சுக்குநூறாக உடைக்கப்பட்டிருந்தன. மலையின் அடிவாரத்தில் நடுகல் அமைப்பில் பல கற்கள் காணப்படுகின்றன. அவற்றைக்கொண்டு ஒரு கோயில் உருவாக்கப்பட்டுள்ளது. அப்பகுதியை அகழாய்வு செய்தால் அந்த நடுகல்கள் பற்றிய தகவல்கள் நிறைய கிடைக்கும். தொல்லியல் துறை அதை உடன் செய்ய வேண்டும் இல்லையெனில் அப்பகுதியையும் கல்குவாரியாக மாற்றிவிடும் வாய்ப்பு உள்ளது.
மலையில் ஏற ஏணி அமைக்கப்பட்டிருக்கிறது. மலையில் இயற்கையாக அமைந்த குகைத்தளத்தில் 50க்கும் மேற்பட்ட கல்படுக்கைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.இங்குள்ள கல்வெட்டுக்கள் சுமார் 2100 ஆண்டுகள் பழமையானவை. குகை முகப்பில் மூன்று தமிழ் பிராமி (தமிழி) கல்வெட்டுகள் உள்ளன. இவற்றின் காலம் கி.மு.முதலாம் நூற்றாண்டு ஆகும். இங்குக் கல்படுக்கைகள் அமைக்க உதவி செய்தவர்களின் பெயர்கள் இக்கல்வெட்டுக்களில் கூறப்பட்டுள்ளன.
அக்கல்வெட்டுகளின் மீது கரிபூசி வைத்திருந்தனர். இவற்றைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு தொல்லியல் துறைக்கும், தமிழக அரசுக்கும், மட்டும் இல்லை. இம்மலை உள்ள ஊரைச் சேர்ந்தவர்களுக்கும் இதைப் பார்க்க வருபவர்களுக்கும் உள்ளது. சமணர் பள்ளிக்குச் செல்ல ஒரு நல்ல பாதை இல்லை. கற்படுக்கைகளின் மேலே அங்கு வருபவர்கள் தங்கள் பெயரை எழுதி அதன் பழமையை சிதைத்திருக்கின்றனர்.
ஹும்....
என்றுதான் இவர்களெல்லாம் திருந்துவார்களோ?
திருந்தி என்ன ஆகப்போகிறது அதுதான் முடிந்தவரை சிதைத்துவிட்டார்களே!!!
வெளியே கடுமையான வெயில். ஆனால் குகை உள்ளே குளிர்சாதன வசதி செய்யப்பட்டிருந்ததைப் போன்று குளிர்ச்சியாக இருந்தது.
நாங்கள் போன அன்று (அப்துல் கலாம் இறுதிச்சடங்கு நடைபெற்ற நாள்) விடுமுறை நாளாக இருந்ததனாலோ என்னவோ நாங்கள் போனபோது சுமார் இருபதுபேர் சீட்டாடிக்கொண்டிருந்தனர். பத்து பேர் இருக்கும் இறைச்சியைச் சமைத்து எடுத்து வந்து சாபபி்ட்டுக் கொண்டிருந்தனர். புலால் மற்றும் கள்ளுண்ணாமையை போதித்த மாகான்களின் சிற்பங்ளுக்கு கீழும் அவர்கள் துயின்றப் படுக்கையின் மேலும் இதெல்லாம் நடந்து கொண்டிருந்தது.
என்ன ஒரு முரண்பாடான வாழ்க்கை !!!
கல்வெட்டுகளின் செய்திகள் :
1. குற கொடுபிதவன் ஊபாசஅன் ஊபறுவ
2. குற கொடல குஇத்தவன் செறஅதன் என்
3. பாகன்ஊர் பேதாதன் பிடன் இத்த வேபோன்
கல்வெட்டுகளின் பொருள் :
1. உபாசன் ஆகிய உப்பறுவன் உறையும் இடம் கொடுப்பித்தான்.
2. சிறுஆதன் என்பவன் உறைவிடம் செதுக்கியளித்தான்.
3. பாகனூர் பேதாதன் பிடன் இதை வேய்ந்தான்.
1. குற கொடுபிதவன் ஊபாசஅன் ஊபறுவ
2. குற கொடல குஇத்தவன் செறஅதன் என்
3. பாகன்ஊர் பேதாதன் பிடன் இத்த வேபோன்
கல்வெட்டுகளின் பொருள் :
1. உபாசன் ஆகிய உப்பறுவன் உறையும் இடம் கொடுப்பித்தான்.
2. சிறுஆதன் என்பவன் உறைவிடம் செதுக்கியளித்தான்.
3. பாகனூர் பேதாதன் பிடன் இதை வேய்ந்தான்.
இக்குகையின் தென்புறத்தில் வெள்ளை நிறத்தில் வரையப்பட்ட பாறைஓவியங்கள் பாறையின் மேற்புறத்தில் இருந்ததைப் பார்த்தோம். இப் பாறைஓவியங்கள் பழங்காலத்தில் அதாவது வரலாற்றுக் காலத்திற்கு முன்பு வரையப்பட்டவை. இவ்வோவியங்களில் மனித உருவம், விலங்கின உருவங்கள், குறியீடுகள் ஆகியவவற்றை காணமுடிந்தது.
அவற்றைப் பதிவு செய்துக்கொண்டு கிளம்பினோம்.
அவற்றைப் பதிவு செய்துக்கொண்டு கிளம்பினோம்.
இவற்றை பாதுகாக்க தவறினால், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பாதுகாப்பாக இருந்தவற்றை, ஆங்கிலேயர்களால் வெளிக்கொணரப்பட்ட நமது பாரம்பரியப் பெருமையை நம்மவர்கள் அழித்துவிடும் கேடுகெட்ட செயலைச் செய்தவர்களாகிவிடுவர்.
பயணங்கள் முடிவதில்லை....
பாலா....
No comments:
Post a Comment