Sunday, 31 December 2023

ஆளுருட்டிமலை

நார்த்தாமலை குடவரைக் கோயிலில் வானியல் பாறை ஓவியங்கள்

புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தாமலையிலுள்ள ஆளுருட்டிமலை அடிவாரத்தில் உள்ள குடவரையின் வடபுறத்தில் பழைமையான பாறை ஓவியங்கள் கண்டறியப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தாமலையிலுள்ள ஆளுருட்டிமலை அடிவாரத்தில் உள்ள குடவரையின் வடபுறத்தில் பழைமையான பாறை ஓவியங்கள் கண்டறியப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருச்சி அறிவோம் அறிவிப்போம் மையத்தின் நிறுவனர் பாலகிருஷ்ணன், தொன்மை குறியீட்டு ஆய்வாளர் சுபாஷ்சந்திரபோஸ், வானியல் ஆய்வாளர் ஜெயபால், தொல்லியல் ஆய்வாளர்கள் கண்ணன், அருண்குமார், ஆகியோர் வெளியிட்ட அறிக்கை:
நார்த்தாமலை பகுதியில் கண்டறியப்பட்டுள்ள இப்பாறை ஓவியங்கள் வரையப்பட்டுள்ள வெள்ளை நிறத்தின் அடிப்படையில் இவற்றின் காலம் 3500 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. முதல் கட்ட ஆய்வின் வெளிப்பாடாக இப்பாறை ஓவியங்கள் வானியல் சம்பந்தப்பட்ட ஓரையான் எனும் உடுக்கணத்தைக் குறிப்பிடுவது போல தெரியவருகிறது. உடுக்கணம் என்பதற்கு விண்மீன் கூட்டம் எனப் பொருளாகும்.
நம் முன்னோர்கள் வான் மண்டலத்தில் குறிப்பாக குளிர் காலத்தின் போது ஆகாய மண்டலத்தில் காட்சித்தரும் உடுக்கணத்தை, வேட்டைக்காரன் (காலப்புருஷர்), ஓரையான் எனும் ஓர் கற்பனை மனித உருவமாக அடையாளப்படுத்தியுள்ளனர். அந்த ஓரையான் எனும் மனித உருவம் தனது வலது கரத்தில் தடியும், இடது கரத்தில் கேடயமும் ஏந்தி நிற்கும் வடிவமாகவும் (படம்-1). உடுக்கை போன்ற உடலும், இடுப்பில் இரு கரங்களை வைத்து நின்ற நிலையில் காட்சித்தருவதும் ஆகும் (படம்-2). அந்த உருவத்தின் இடுப்பு அரைக் கச்சையிலிருந்து வாள் ஒன்று (தொங்கியவாரும்) இருக்கும் (படம்-3) படி வரையப்பட்டுள்ளன.
இதுகுறித்து அமெரிக்க வானியல் ஆய்வறிஞர் கேரி ஏ டேவிட் கூறுகையில் இப்பாறை ஓவியங்களை ஓரையான் எனும் உடுக்கணமாகக் கருதலாம் எனவும், இது வியப்பூட்டும் கண்டுபிடிப்பு எனவும் குறிப்பிட்டுள்ளார். இங்கு வரையப்பட்டுள்ள பாறை ஓவியங்கள், குறியீடுகள் ஆகியவைப் பற்றி மேலும் துல்லியமாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment