பயணங்கள் முடிவதில்லை : மல்லப்பாடிப் பாறைஓவியங்கள்
1879 ஆம் ஆண்டில் ஸ்பெயின் நாட்டில் 12 வயது சிறுமி அந்நாட்டின் அல்டமிரா குகைககளில் உலகின் முதல் பாறைஓவியத்தைக் கண்டுபிடித்தபோது உலகே வியப்பிலாழ்ந்தது, ஏனெனில் தொல்பழங்காலத்தில் வாழ்ந்த மனிதனுக்கு தன் எண்ணங்களை பதிவுசெய்யத்தெரியாது என்றக் கருத்து நிலவியதால். இதற்கு முன்பே ஜார்ஜ் கிரே என்பவரால் ஆஸ்திரேலியாவில் பாறைஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும் அது உலகின் கவனத்தைக் கவரவில்லை என்றுத்தான் கூறவேண்டும். இதற்குப்பின்னரே மானுடவியல், தொல்லியல் போன்ற துறைகளைச் சேர்ந்த ஆய்வாளர்களிடையேப் பாறை ஓவியங்கள் பற்றிய ஆர்வம் எழுந்தது.
ஆஸ்திரேலியா, ஐரோப்பா என்று தொடர்ந்து அடுத்தடுத்துப் பல ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்தியாவில் இத்தகைய ஓவியஙக்ள் இல்லையென்றுக் கொண்டிருந்தக் கருத்தை 1957 ஆம் ஆண்டில் மததி்யப்பிரதேசத்தில் பிம்பெட்காவில் கண்டுபிடிக்கப்பட்ட பாறைஓவியங்கள் மாற்றியது. இந்தியப் பாறை ஓவியங்களின் தந்தை எனக்கருதப்படும் வாகான்கர் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட பிம்பெட்கா பாறைஓவியங்கள் மத்தியப் பிரதேசத்தின் ரெய்சென் மாவட்டத்தில் உள்ளன. இவை விந்திய மலைத்தொடர்களால் சூழப்பட்டு எழிலுடன் காட்சியளிக்கிறது.
இங்கிருக்கும் 600 கும் மேற்பட்டக் குகைளில் பழங்கால மனிதர்களின் தினசரி வாழ்க்கை நடவடிக்கைகள் பல்வேறு ஓவியங்களின் மூலமாக வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன.
மனிதர்களின் ஓவியங்கள் மட்டுமல்லாமல், புலி, நாய், பல்லி, யானைகள், எருதுகள் மற்றும் பல விலங்கினங்களின் ஓவியங்களும் இந்த குகைகளில் வரையப்பட்டுள்ளன.
இந்த ஓவியங்கள் வரைவதற்கு இயற்கையான நிறங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த குகைகளின் உட்புற சுவர்களில் இந்த ஓவியங்கள் காணப்படுகின்றன. ஆரம்ப காலத்தில் இவை பௌத்த மதத் தலங்களாகவே கருதப்பட்டு வந்தநிலையில் , அறிவியல் பூர்வமான ஆய்வுகள் , இவை 25,000 ஆண்டுகளுக்கு முன்பு வரைப்பட்டவை எனக்காட்டியது. பல்வேறு வரலாற்றுக் காலகட்டங்களுக்கு நம்மைப் பயணிக்க வைக்கும் தன்மையுடைய பிம்பெட்கா ஓவியங்கள் இருப்பதால், அவை இந்தியக் கலாச்சார பாரம்பரியத்தின் தேசியப் பொக்கிஷங்களாகக் கருதப்பட்டுவருகின்றன.
தமிழகப்பகுதியைப் பொறுத்தவரை 1970 வரைக் குறிப்பிடத்தக்க பாறை ஓவியங்கள் எதுவும் இல்லை என்ற நிலையே நிலவியது. 1970 களில் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மல்லபாடியில் சென்னைப் பல்கலைக்கழகத் தொல்லியல் துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டப் பாறைஓவியம் முக்கியமான ஒரு கண்டுபிடிப்பாக அமைந்தது. தொடர்ந்து, தமிழ்நாட்டில் தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பாறைஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இத்தகைய சிறப்புமிக்க மல்லப்பாடிப் பாறைஓவியங்களைக் காணத்தான் திரு. சுகவன முருகன் அழைப்பையேற்று திரு.கே.டி.காந்திராஜனுடன் நண்பர் மாரியும் சேர்ந்துகொள்ள மல்லப்பாடி நோக்கிப் பயணித்தோம்.
கிருஷ்ணகிரியிலிருந்து 18 கி.மீ தொலைவிலுள்ள பர்கூரையடைந்து அங்கிருந்துத் திருப்பத்தூர் செல்லும் வழியில் மல்லப்பாடி எனும்வூர் உள்ளது. இவ்வூரைச் சுற்றிப் புதியகற்காலப் பண்பாட்டு எச்சங்கள் நிறைய உள்ளன என்றும் இந்நிலப் பரப்பில் புதிய கற்கால மக்கள் குன்றுகளின் அடிவாரத்திலும் சமவெளிகளிலும் வாழ்ந்திருக்கின்றனர் என்றும் படித்தது நினைவில்வர ஒரு தேவாலயத்திற்கு எதிரேதெரிந்த தேங்காய் மண்டிக்கருகில் எங்கள் வாகனத்தை நிறுத்திவிட்டு மலையேற ஆரம்பித்தோம் .
மலைஏறும்போது வழியில் ஆஞ்சநேயர் கோயில் ஒன்றைப் பார்த்தோம். முதலில் வழிமாறி சென்றுவிட்டோம் , அதனால் மலையிலேயே ஒரு மணிநேரமாக அங்கும் இங்குமாகத் திரிந்து ஒருவழியாக சரியானப் பாதையைக் கண்டுப்பிடித்து விட்டார் முருகன். குகைபோன்ற அமைப்பிலிருந்த பாறையில் வெள்ளை நிறத்தில் வரையப்பட்ட ஓவியத்தைக் கண்டோம். இரண்டு மனிதர்கள் குதிரையில் எதிரெதிரே நிற்கின்றனர். இருவரின் கையிலும் நீண்டக் கம்புபோன்ற ஆயுதம் உள்ளது. பொதுவாகப் பாறைஓவியங்கள் விரல்களினாலோ, குச்சிகளினாலோ, இறகுகளினாலோ வரையப்பட்டிருக்கும் ஆனால் இந்த ஓவியத்தை வரைய அவர்கள் தூரிகையை பயன்படுத்தியிருப்பது தெளிவாகத் தெரிகிறது பாருங்கள் என்று காந்திராஜன் கூற அப்போதுதான் அந்த ஓவியத்தை நன்றாக கவனித்தோம்.ஆமாம் அவர் சொல்வது சரிதான் இதை வரைந்தவர்கள் தூரிகையைப் பயன்படுத்தியிருப்பது அந்த ஓவியத்தில் தெரிந்த கோடுகள் உணர்த்ன.
படங்களை நன்றாகப் பாருங்கள்.
இதைத்தவிர விலங்கு ஒன்றின் ஓவியமும் ஒரு மனிதன் நிற்ககும் ஓவியமும் அங்குள்ளது. இவ்வூரைச் சுற்றி புதிய கற்காலப் பண்பாட்டு எச்சங்கள் நிறைய உள்ளன என்பதை சமீபத்தில் இங்கு நடைபெற்ற ஆய்வுகள் உறுதிப் படுத்துகின்றன. இவ்வோவியம் உள்ள இடத்தினருகிலேயே பல குகைப் பகுதிகள் இருக்கின்றன. இங்கெல்லாம் கற்கால மனிதர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். இக்குகையில் பழையற்காலத்தைச்சேர்ந்த ஆயுதங்களையும் காணமுடிந்தது. இப்பபகுதியில் பழங்கற்காலத்திலிருந்தே தொடர்ந்து மக்ககள் வாழ்ந்து வருகிறார்கள் எனத்தெரிகிறது. அவற்றைப் பதிவுசெய்துக்கொண்டு அங்கிருந்துக்கிளம்பினோம்.
நமது அடுத்தப் பயணம் குந்தானி மலையை நோக்கி....
நன்றி
பாலா

No comments:
Post a Comment