அண்மையில் புலிப்பட்டி பாறைஓவியங்களைக் காண நண்பர்களுடன் சென்றிருந்தோம். புலிக்குகையில் உள்ள பறவைத்தலை மனிதர்கள் தோற்றத்தில் உள்ள ஓவியங்களைப் பார்த்த நண்பர் ஒருவர் இவ்ஓவியத்திற்கும் மோட்டூரில் உள்ள தாய்த்தெய்வ பாறைக்கும் தொடர்பு உள்ளதா? என கேட்டார். பதில்: உண்டு. புலிப்பட்டி போன்றே விழுப்புரம் மாவட்டம் கீழ்வாலை பாறைஓவியங்களில் பறவைத் தலையுடன் மனித உருவங்களைக் காணலாம். இங்குக் காணப்படும் மனித உருவங்கள் போன்று திருமலை, திருமயம் உட்பட பல இடங்களிலும் வரைந்து வைத்துள்ளனர். கீழ்வாலைக்கு மிக அருகே உள்ள ஊர் உடையாநத்தம். இங்கு மோட்டூரில் உள்ளது போலவே பலகைக் கல்லில் செய்யப்பட்ட உருவம் வழிபாட்டில் உள்ளது. இவற்றை தாய்த்தெய்வம் என்கிறார்கள். உடையாநத்தம் பலகைக்கல் சிற்பத்தை விசிறிப்பாறை என்கிறார்கள். இவ்விசிறிப்பாறைக்கும் கீழ்வாலை பாறைஓவியத்தில் காணப்படும் மனித தோற்றத்திற்கும் தொடர்பு உண்டு. பறவைத்தலையுடன் காட்டப்பட்டிருக்கும் உருவத்தின் சிற்ப வடிவம்தான் விசிறிப்பாறை, மோட்டூரில் இருக்கும் பலகைக்கல் சிற்பங்கள்.
Saturday, 30 December 2023
பறவைத்தலை ஓவியமும் தாய்த்தெய்வ வழிபாடும்
- பாலா பாரதி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment